Posts

Showing posts from July, 2024

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

"பேயாரும் அரசரும்" - "அம்மையும், அப்பரும்"  திருப்பணிச் சக்ரவர்த்தி திருமுருக கிருபானந்த  வாரியார் சுவாமிகள் பழநியம்பதியில் எழுந்தருளி இருந்த போது, வானொலியில் திரையிசைப்பாடல் ஒன்றினைக் கேட்டார். அருகிலிருந்த விடுதிப் பணியாளரிடம் "இது யார் பாடிய பாடல் என்று கேட்டார். அதற்கு பணியாளரோ, பாடகரின்  பெயரினைக் குறிப்பிடாமல், பாடலுக்கு வாய் அசைத்த நடிகரின் பெயரினைக் குறிப்பிட்டார். இச்சம்பவம், வாரியார் சுவாமிகளுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.  திரைக்கு பின்னால் இருந்து பாடுபவர் ஒருவர், ஆனால் திரைக்கு முன்னிருத்து வாய் அசைப்பவரையே உலகம் பாடகராக எண்ணுகிறது. அதே போன்றுதான், பன்னிரு திருமுறையாசிரியர்களும் வாய் அசைத்தவர்களே என்றும், அவர்களை உள்ளிருந்து பாட வைத்தவர் ஒருவரே என்றும், அவரே நம்பெருமான் நாரிபாகன் என்றும் உணர்ந்தார்.  ஆம், அன்பர்களே! அதனால்தான் பன்னிரு திருமுறையாசிரியர்களின் வாக்குகளில் முரண்பாடுகள் இல்லை. மேலும் திருமுறைப்பாடல்களுக்கு விளக்கங்கள் தனியே தேட வேண்டாம், அதற்குள்ளேயே அமைந்துள்ளது என்று தமிழ் கூறும் நல்உலகம் எங்கும் சென்று எடுத்துரைத்தார், தருமையாதினப்புல

அருட் பித்தனின் துதி வாசகம் 2 - இளம்பரிதி

 தாயே ஆகி, வளர்த்தனை போற்றி! வேதங்கள் துதித்த தெய்வத்தை, பொதுமக்களின் மொழிதனில் போற்றி பாடின பக்தி செய்யுள்கள். உலகில் உள்ள பக்தி இலக்கியங்களில் தெய்வத்தை அத்தனை மனித தன்மை பொருந்திய ரூபமாய் மாற்றி, பாவிகளும் தீண்டி அனைத்துக் கொள்ளும் அளவுக்கு அருகில் அமரச் செய்ததில் விவிலியத்திற்கு அதிக பங்குண்டு, தேவன் உன் அருகிலே தான் இருக்கிறார் என்பதை உணர்த்தி சொல்லிய பக்தி செய்யுள் அது.  பழைய ஏற்பாட்டில் தாவீதின் சங்கீதம் என்ற பகுதி மிகுதியான புகழ் பெற்றது, திருவாசகத்தின் போற்றி திருவகவல் பகுதியின் அருகில் வைத்து ஒப்புநோக்கு வதற்கு ஏற்ற பகுதி அது. பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது இயற்றிய சங்கீதம் கிறிஸ்துவுக்கு ஆயிரம் வருடம் முந்தியது, மாணிக்கவாசகரின் திருவாசகம் காலகட்டம் பொதுயுகம் 900 ஆம் ஆண்டுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒற்றை கடவுளை துதிக்கும் பாடல்கள் கிருஸ்துவத்தில் இருந்து சைவ சமயம் வரை எப்படி எல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதை தொகுத்து பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம். ( எந்த சமயம் மூத்தது, எது உயர்ந்தது என்றெல்லாம் பாகுபாடு செய்து பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கம்

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

  மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் கோசாலை அருகே கோவிலின் தலவிருட்சம் புன்னை மரம். சுற்றி வருகையில் அந்த மரத்தைப் பார்க்கும்போது சங்கப்பாடல்களில் முடத்தாள் புன்னை என புன்னைக்கு முன்னொட்டாக சொல்லப்படும் முடத்தாள் எனும் சொல் காட்சியாக கண்முன் நிற்பதை உணர்ந்தேன். ஒரு நொடி உள்ளே சில்லென ஆனது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த ஒரு காலத்திலிருந்து எழுந்து வந்த சொல் இன்றும் பிரத்யட்ச பிரமாணமாக , கண்முன் மெய்யென துலங்கி நிற்கும் அதிசயத்தை கவிதை நிகழ்த்தியதா , இயற்கை நிகழ்த்தியதா , காலம் தாண்டி மானுட மனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட மீமனம் எனக்குள் வந்து என் உணர்வை தொட்டுச் சென்றதா... அந்த ஆய்வை விட வளைந்த தண்டோடு மட்டுமே நின்ற , நிற்கும் அதுவரை நான் கண்ட அனைத்து புன்னைகளும் ஒருசேர நினைவில் எழும் அழகின் பாரத்தால் கால்கள் தொய்ய அமர இடம் தேடினேன். புன்னையின் நிழலிலேயே சிறு மண்டபம். அம்மை உமை மயில் வடிவில் அப்பன் சிவனை பூசித்த காட்சி கல்லில் வடிக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட தனிச் சன்னதி. அந்த சன்னதியிலிருந்து நீண்டு நாலுக்கு நாலு என கட்டப்பட்ட நந்தி மண்டபம். அதன் விளிம்பில் புன்னையைப் பார

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்

Image
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான் மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.' இராமன்  குகன் சுக்ரீவன் விபீடணன் ஆகியோரை தனது சகோதரர்களாக சேர்த்துச்சொல்லும் புகழ்பெற்ற கம்பனின் பாடல் இது. இராமன் தனது அன்புள்ளத்தால் தன் அருகனைவோரை தம்பியராக சேர்த்துக்கொண்டான். அதில் வேடனான குகனும், குரங்கினத்தவனாகிய சுக்ரீவனும், அரக்கனாகிய வீடணனும் உண்டு. அறத்தின்மூர்த்தியாகிய ராமனின் வரிசைப்படுத்தல் போல எளிதானது அல்ல சமயத்தின் குருமரபினரை வரிசைப்படுத்தல். காலம் ஏழாம் நூற்றாண்டு, பாண்டிய பல்லவ பேரரசுகள் தமிழகத்தை களப்பிரரிடமிருந்து மீட்டு ஆண்டுகொண்டிருந்த சமயம். சைவ சமயம் தமிழகத்தில் பரவலாக்கம் பெற்ற இந்த பக்தி இயக்க காலகட்டத்தில் முதன்மையான தொண்டர்களாக அப்பர் சம்பந்தர் இருவரும் இருந்தனர். முறையே அப்பர் தொண்டைநாட்டிலும், சம்பந்தர் சோழ நாட்டிலும் பிறந்தவர்கள். இருவரும் தமிழ்ப்பதிகங்களை பாடி ஊர்தோறும் பயணித்து சமயம் வளர்த்தனர். சிவபெருமானின் மறத்தையும் அருளையும் மொழியின் சுவையோடு தமிழகத்

நவீன வாசகனுக்கு பக்தி இலக்கியம் அளிப்பது என்ன? காணொளி - ஜா. ராஜகோபாலன்

 பக்தி இலக்கியம் என்றாலே அது ஏதோ புரியாத ஒன்று என்றும், சலிப்பு அளிப்பது என்றும் நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கான விளக்கம் தருகிறார், ஜா ராஜகோபாலன். கேட்ட பின்பு பக்தி இலக்கியங்களை வாசிக்காமல் இருக்க முடியுமா என்ன?!!!! https://youtu.be/uYc2sQp7ncI?si=FcuOsybmRVtG63HR

பக்தி இலக்கியம் கேள்வி பதில் - அகரமுதல்வன்

கேள்வி: ஒரு நவீன இலக்கிய வாசகர் பக்தி இலக்கியத்தை கவிதையாக, மொழி அழகியலயாக, தத்துவமாக, பக்தியாக என நீளும் குழப்பங்களில் எவ்வாறு வாசித்துக் கண்டடைய வேண்டுமென நினைக்கிறீர்கள்? முத்துமாணிக்கம் அன்பின் முத்துமாணிக்கம்!  நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் பக்தி இலக்கியம் குறித்த பிரக்ஞை குறிப்பிடப்படுமளவு இல்லை. பக்தி இலக்கியத்தைக் குறித்து உரையாடினாலே பிற்போக்குத்தனமென்று உதறித்தள்ளும் பாவனை முற்போக்கு இரைச்சல் எழுந்துவிடும். இதன் விளைவாகவே நவீனத் தமிழ் இலக்கிய வெளி தன்னுடைய பாவனை முற்போக்கு தந்திரங்களுக்காக பக்தி இலக்கியங்களை கைவிட்டுவிட்டது. இதனால் பக்தி இலக்கியத்திற்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக நமக்குத்தான் பேரிழப்பு. மேலும் .. https://akaramuthalvan.com/?p=2480

சொற்பதம் கடந்த தொல்லோன் - அருணாச்சலம் மகராஜன்

நம்முடைய மரபில் தெய்வங்கள் வந்து எழுதிய நூல்கள் நானறிய இரண்டு. முதலாவது வியாசர் சொல்லச் சொல்ல யானை முகக் கடவுளும், கணங்களின்‌ அதிபதியுமான கணபதி தன் ஒற்றைக் கொம்பை முறித்து எழுதிய மகாபாரதம். இரண்டாவது நூல் மானுடன் தெய்வத்துக்கு உரைத்தது எனப் பெயர் பெற்ற திருவாசகம். தான் அனுபவித்த தெய்வ அனுபூதியை, இறையருள் என்னும் வானப் பேரியாற்றில் பக்தர்கள் இறங்கி திளைக்க ஏதுவான துறைகள் என வந்த ஆலயங்கள் தோறும் சென்று நிறைப்பதையே தன்னறமாகக் கொண்டு வாழ்ந்து வந்த வாதவூரடிகளான மாணிக்கவாசகரை தில்லையில் ஆட்கொள்ள திருவுளம் கனிந்த அழகிய சிற்றம்பலத்தவரான ஈசன், அவர் அடைந்த இறையனுபவம் நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் பயனுற விளங்கவேண்டும் என்ற அருளால் தாமே அந்தணரென வந்தமைந்து ஓலையில் மாணிக்கவாசகர் பாடக் கேட்டு எழுதியது என்பது தொன்மம். தில்லையில் இருந்த அந்த ஓலைச்சுவடி கர்நாடக நவாபின் படையெடுப்பின்போது நாகலிங்க அடிகளால் பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழையில் வைத்து பாதுகாக்கப் பட்டு வருவதாக

வெண்பா - ராமஷேஷன்

திருவாசகத்தைப் பற்றி திரு ராமஷேஷன் அவர்கள் எழுதிய வெண்பா  வேதத்தின் சாரமும் வேள்விப் பயனதுவும்  நாதத்தின் ரூபமாய் நல்கிடும்  - பாதத்தில் ஈசனின் வாசகம் இன்புற்றுப்  பாடியோர்  மாசில்லா வாழ்வு மலர்ந்து.

அருட் பித்தனின் துதி வாசகம் 1 - இளம்பரிதி

 கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் எடக்கல் குகையில் உள்ள பாறை செதுக்கு ஓவியங்கள் கி.மு 6000 வருடத்தை சேர்ந்தவை. அதில் தலையில் கிரீடம் சூடிய ஒரு மனிதனை சுற்றி பிற மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர் அந்த குழுவின் தலைவனாகவோ, தலைமை பூசகனாகவோ அவன் இருக்க கூடும், அன்று தொட்டு தலைவன் வழிபாடு நம் மரபில் உள்ளது. ஒரு தலைவன் என்பவன் யார், அவனின் அம்சங்கள் என்ன, அவனின் பராக்கிரமங்கள் என்ன, அவன் எனக்கு அளிப்பது என்ன என ஒரு கதையாடலாகவே அவனை பற்றிய துதிகள் விளங்குகின்றன. அன்று தொட்டு இன்று வரை ஒருவர் பற்றிய துதிகளே அவரை பற்றிய வாய்மொழி வரலாறாக நிலைக்கிறது. கர்ணனின் கொடை , தருமரின் அறம், பீமனின் வலிமை, அர்ஜுனனின் வீரம் இவை எல்லாமே அவர்களை பற்றிய வாய்மொழி துதிப்பாடல்கள் மூலமே நம்மிடம் நிலைத்துள்ளது. "என்லிலுக்கு கீதம்" (Hymn to Enlil) என்ற துதிப்பாடல் சுமேரிய நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கி.மு 2100 ஆம் ஆண்டை சேர்ந்த அந்த பாடல், காற்று மற்றும் பூமிக்குரிய சுமேரியக் கடவுளைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது, வரலாற்றில் பதிவாகி உள்ள பழமையான துதிப்பாடல் இதுவாக கூட இருக்கலாம். ஒற்றை கடவுளுக்கு பாடப்பட்ட