எங்களைப்பற்றி

இந்தியா முழுவதும் வழக்கிலிருந்த ஆறு பெருமதங்கள் ஒன்றிணைந்தும், பல்வேறு தரிசனங்கள் அடித்தளமாக அமையப்பெற்றும், எண்ணற்ற சிறுதெய்வ வழிபாடுகள் நதிகளென உட்புகும் மாக்கடலாகவும் இந்து சமயம் விளங்குகிறது. தமிழகத்தில் பக்தி இயக்கம் எழுச்சி பெற்ற காலமான ஏழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை உயிர்ப்போடு இருப்பது இந்துசமயத்தில் இணைந்து விட்ட சைவநெறி. கோவில்கள் திருவிழாக்கள் இலக்கியங்கள் என தமிழக பண்பாட்டுக்கூறுகள்  அனைத்திலும் சைவத்தின் பங்கு முதன்மையானது.

தன்னை மாற்றிக்கொள்ளும் சமயமே நீடுவாழமுடியும், இன்னும் சொன்னால் மாறிக்கொண்டே செல்வதும் நிலையானதுமான கூறுகள் இந்த மதங்கள் அனைத்திலுமே இருக்கும். இன்றும் சைவம் இளையோர்களை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கிறது, காரைக்காலம்மை கண்ணப்பர் தொட்டு எது சைவத்தை இயங்கச்செய்கிறது என்பது முக்கியமான வினா. அதை இந்த தலைமுறையினர் புரிந்துகொள்ள இத்தளம் உதவும். தொடர்ந்து சைவம் சார்ந்த உரையாடல்களுக்கான களமாகவும், வெவ்வேறு காலங்களில் சைவம் கடந்துவந்த தடங்களை பதிவுசெய்வதாகவும் இந்த வலைப்பூ அமையும்..

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்