சுந்தரரின் திருப்புகலூர் திருப்பதிகம் - டாக்டர் மணிமேகலை
பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன.இத்தேவாரத் திருப்பதிகங்களை ஓதும் முறைக்குப் பண்முறை எனவும் தலமுறை எனவும் வரலாற்று முறை எனவும் வழங்கி வருகின்றனர். பண்முறை எனப்படுவது தேவாரம் பாடிய அருளாளர்கள் அப்பதிகங்களுக்குப் பண்களை அமைத்துப் பாடியுள்ளனர் .அப்பண்களுக்குரிய திருப்பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்கும் முறையாகும் தலமுறை என்றால் தில்லைப் பெருங்கோயிலை முதன்மையாக வைத்துத் தலங்களுக்குரிய பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்குவதாகும். வரலாற்று முறை என்றால் மூவர் வழிபட்டுச் சென்ற அடிச்சுவட்டில் தலங்களை வரிசைப் படுத்துவதாகும். சுந்தரர் பாடிய பாடல்களில் இன்று கிடைத்திருக்கும் பதிகங்கள் நூறாகும்.ஒவ்வொரு தலத்திற்கும் நேரடியாகச் சென்று பாடிய பாடல்களும் ஒரு தலத்திலிருந்து மற்றொரு தலத்தை நினைத்துப் பாடிய பதிகங்களுமாக அவை அமைகின்றன.சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையில் இடம் பெறுகின்றன. அதில் திருப்புகலூர் திருத்தலத்திற்கு உள்ள பதிகத்தை மட்டும் இக்கட்டுரை ஆய்கின்றது. முன்னுரை சோழவள நாட்டின் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள எழுபத்தைந்தாவது சிவத்தலம் திருப்பு