Posts

Showing posts from August, 2024

சுந்தரரின் திருப்புகலூர் திருப்பதிகம் - டாக்டர் மணிமேகலை

பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன.இத்தேவாரத் திருப்பதிகங்களை ஓதும் முறைக்குப் பண்முறை எனவும் தலமுறை எனவும் வரலாற்று முறை எனவும் வழங்கி வருகின்றனர். பண்முறை எனப்படுவது தேவாரம் பாடிய அருளாளர்கள் அப்பதிகங்களுக்குப் பண்களை அமைத்துப் பாடியுள்ளனர் .அப்பண்களுக்குரிய திருப்பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்கும் முறையாகும் தலமுறை என்றால் தில்லைப் பெருங்கோயிலை முதன்மையாக வைத்துத் தலங்களுக்குரிய பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்குவதாகும். வரலாற்று முறை என்றால் மூவர் வழிபட்டுச் சென்ற அடிச்சுவட்டில் தலங்களை வரிசைப் படுத்துவதாகும். சுந்தரர் பாடிய பாடல்களில் இன்று கிடைத்திருக்கும் பதிகங்கள் நூறாகும்.ஒவ்வொரு தலத்திற்கும் நேரடியாகச் சென்று பாடிய பாடல்களும் ஒரு தலத்திலிருந்து மற்றொரு தலத்தை நினைத்துப் பாடிய பதிகங்களுமாக அவை அமைகின்றன.சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையில் இடம் பெறுகின்றன. அதில் திருப்புகலூர் திருத்தலத்திற்கு உள்ள பதிகத்தை மட்டும் இக்கட்டுரை ஆய்கின்றது. முன்னுரை சோழவள நாட்டின் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள எழுபத்தைந்தாவது சிவத்தலம் திருப்பு

பக்தி - அ.ச ஞானசம்பந்தன்

Image
                                                                                இந்தப் பெரிய உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், எல்லா மொழிகளும், முழு வளர்ச்சி பெற்றவை அல்ல. சில மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு மொழி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதன் பொருள் என்ன? நல்ல இலக்கணம், இலக்கியம் நிறைந்துள்ள மொழியை வளர்ச்சி அடைந்துள்ள மொழி என்று கூறுகிறோம். அம்முறையில் பார்ந்தால் முழு வளர்ச்சி பெற்ற மொழியாகும் நம் தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம் மொழியில், நிறைந்த இலக்கண இலக்கியங்கள் உண்டு. அவ்வளவு பழைய இலக்கியத்திலும் ஒரு தனிச் சிறப்பை உடையது நம் தமிழ் மொழி. இந்த வளம் பற்றிப் பாடும் சிறப்பை அப்பொழுதே பெற்றுள்ள மொழி இதுவாகும். மிகப் பழைய பாடல்களான முருகப் பெருமானைப்பற்றிக் கூறும் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் இருக்கின்றன. இவற்றையே பக்திப் பாடல்கள் என்று கூறுகிறோம். பக்தி என்றால் யாது? மனிதனிடந்துக் காணப்படும் ஒருவகை மன நிலையையே பக்தி என்று கூறுகிறோம். மனிதன் முதலில் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைக் காணுகிறான். இறுதியாகத் தன்னைத் தானேயும் காண்கிறான்.

காரைக்காலம்மை கட்டுரை 2 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

காரைக்காலம்மை கட்டுரை - 1 சித்தாந்தம் என்ற பொதுச்சொல் தமிழ் ஆன்மிக மரபில் சைவ சித்தாந்தத்தையே சுட்டி நிற்கும். ஆதியிலிருந்து வரும் மரபு என சைவர்கள் பற்றின் மிகுதியால் சொன்னாலும் ஐந்தாம் நூற்றாண்டை சித்தாந்தத்தின் துவக்கமாக் கொள்வது ஆய்வுகளின் முடிவு. ஆனால் காரைக்காலம்மை இந்த காலத்திற்கும் முற்பட்டவர் என்பது நினைவில் இருத்த வேண்டிய ஒன்று. ஆகவே சித்தாந்தம் பின்பற்றி ஒழுகுவதற்கான நியம, நிட்டைகளை வலியுறுத்தி, வணங்கத்தக்க இறைவனின் பண்பு நலன்களை வரையறுத்து சொல்லும்போது உருவாகி வரும் சிவத்தை  அம்மையிடம் காண முடியாது. வரையறைக்கு உட்பட்ட சிவமும், அதனை மீறி எழும் பரசிவமும் அம்மையிடம் மாறி மாறி வெளிப்படுவதைக் காணலாம்.  இதுவன்றே ஈசன்    திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர்    சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய்    மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.  அம்மையின் ஆழுள்ளத்தில் பரசிவம் தன்னைக் காட்டிக் கொண்ட வடிவை தன் நினைவாலே மீள மீள சிந்திக்கும் காரைக்காலம்மைக்கு அவன் தோன்றும் வடிவம் “மின்னுஞ் சுடருருவாய்” தெரிகிறது. அம்மையின் கனிந்த ஞானம் வெளிப்படும் இடம் நுட்பமானது. இறைவனின் வடிவம்