சைவ சித்தாந்தப் பார்வை 2 - உ முத்துமாணிக்கம்
என்னுடைய நண்பன் (சென்ற முறை வந்த அதே நண்பன் தான்) ஏன் சைவ சித்தாந்தம் தெரிய வேண்டும்?என்றான். உண்மைதான் ஏன் தெரிய வேண்டும். சைவம் அதை விரிவாக சொல்கிறது. சைவத்தில் இரண்டு வகை பாதைகள் உள்ளன. ஒன்று சாத்திரப் பாதை மற்றது தோத்திரப் பாதை. அதாவது பக்தி பாதை, தத்துவப் பாதை. ஏன் ஒன்றுக்கு இரண்டு பாதைகள் என்று இந்த இடத்தில் கேள்வி இணைகிறது. காரணம் மனிதர்கள் பலவாறாக பிரிந்து இருக்கிறார்கள். சிலர் இதுதான் கடவுள் இப்படித்தான் பக்தி செலுத்த வேண்டும் என்றால், உடனே மறுக்காமல் எந்த கேள்விகளும் இல்லாமல் அதை செய்கிறார்கள். பைரவருக்கு அஷ்டமியில் விளக்கு ஏற்றுவதில் இருந்து மார்கழி மாதத்தில் காலையில் திருவெம்பாவை படிக்கிற வரை அனைத்தும் தோத்திர முறைதான். இதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அவரவர் மனநிலைக்கேற்ப ஆன்ம தகுதிக்கேற்ப ஏற்ப அனைத்துமே தோத்திர வழிகள் தான்.
சைவர்கள் இந்த தோத்திரப் பாதையை பகுப்பாய்வு செய்து நான்கு வழிகளை கண்டுபிடித்தார்கள். இவர்கள் உருவாக்கி கண்டுபிடிக்கவில்லை, மாறாக இயல்பாக இருந்ததை இவர்கள் கண்டு கொண்டனர் . அதை நான்கு பிரிவுகளாக பிரித்தார்கள்.
சரியை கிரியை யோகம் ஞானம் என்று சமைத்தார்கள். அது என்ன சரியை கிரியை யோகம் ஞானம்? சாதாரணமாக வணங்கலாமே, என்றால் இயல்பாக மற்றும் சாதாரணமாக வணங்குவதை தான் அவர்கள் ஒரு பிரிவுக்குள் சேர்க்கிறார்கள்.
ஒருவர் நின்று கொண்டு சத்தம் போட்டு திருமுறை பாடி வணங்குகிறார். ஒருவர் காரில் போகும்போது இறைவனுக்கு flying kiss தந்து விட்டு போகிறார். ஒருவர் கோவிலுக்கே செல்லாமல் வணங்குகிறார். இப்படி பலவாறாகவும் வழிபாடுகள் இருப்பதைத்தான் பகுப்பாய்வு செய்து நான்கு நிலைகளாக பிரிக்கிறார்கள். முதலில் வருவது சரியை. சரியை என்றால் புறத்தே வணங்குவது.
மேலே சொல்லப்பட்டதே, ஒருவன் காரில் பூசைகளில் கலந்து கொண்டு போகிறான் கோவிலை பார்த்தால் உடனே தன் ஒரு கையால் வணங்குகிறான் அவன் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை மாறாக கோவிலை பார்த்தவுடன் புறத்தை மட்டும் வணங்குகிறான் இதற்கு சரியே என்று பெயர்.
அடுத்து கிரியை. இது புறத்தில் வழங்குபவன் சற்றே மனதளவிலும் வணங்கி தன் நிலையில் இருந்து மாறுகிறான். அதாவது கோவிலுக்கு சென்று, பூசைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வரும் ஒருவன், அதே வேளையில் எங்கேயும் செல்லாமல் தன் மனதில் மட்டும் சிறிது வணங்குவது கிரியை அகம் புறம் இரண்டிலும் சேர்ந்து வணங்குவது கிரியை முறை.
அடுத்த நிலை யோகம். இது முற்றிலும் அகத்தை வழிபடுவது. இருந்த இடத்தில் இருந்து தன் மன யோக நிலையால் இறைவனை வழிபட்டு வருவது. இதற்கு புறம் தேவையே இல்லை. பூசை முறைகள் எதுவுமே தேவையில்லை. முற்றிலும் அகம் சார்ந்து வழிபடுவது.
அடுத்த நிலை ஞானம். யோகநிலையில் இருக்கும் ஒருவன் தன் நிலையை கூட்டி தன் பக்தியை மேம்படுத்துவது ஞான நிலை. என் ஆசிரியர் இந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்பார்? என்னவென்றால், சரியே கிரியை யோகம் எல்லாம் புறத்திலும் அகத்திலும் வழிபாடுகள் செய்வது. ஆனால் ஞானம் எப்படி வழிபாடாகும் அது ஒன்றிய நிலையே, தவிர அது எப்படி வழிபாட்டில் சேரும் என்று கேள்வி கேட்டு, அதற்கு விளக்கம் அளிப்பார். நாம் மாடிப்படி ஏறுகிறோம். கடைசி படிக்கு வந்துவிட்டோம். அதற்குப்பின் அந்த படி தளத்தோடு சேர்ந்துள்ளது. அதை நாம் படி என்று சொல்ல முடியுமா? அல்லது தளம் என்று சொல்ல முடியுமா? என்றால் இரண்டுமே தான் என்பார். அதுபோலத்தான் ஞானமும். அது வழிபாடு என்றால் வழிபாடுதான், பக்திநிலை என்றால் அந்த நிலைதான்.
சரி வழிபாட்டில் இந்த நான்கு நிலை மட்டும் தானா? என்றால், இதை மேலும் பிரிப்பார்கள். உண்மை சரியை, உபயச்சரியை, உண்மை கிரியை, உபாயக்கரியை, உண்மையோகம், உபாயோகம், உண்மை ஞானம், உபாயா ஞானம் என்று.
அது என்ன உண்மை மற்றும் உபாயம் என்றால் எந்தவித நோக்கமும் இல்லாமல் வழிபாடு செய்வது உண்மை நிலை. ஏதோ ஒரு குறிக்கோளோடு செய்யப்படும் வழிபாடு உபாய நிலையாம். அப்படி உண்மை மற்றும் உபாயம் என்று பிரித்து, இதை பார்த்தால் எட்டாக வரும். இந்த எட்டு நிலை தான் பக்தி நிலைகளா? என்றால் அதுவும் இல்லை இன்னும் பிரிவு உள்ளது என்று பிரிப்பார்கள்
சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியின் ஞானம் என்றும், கிரியையில் சரியை கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம், என்றும் 32 ஆக வரும்
ஆக இப்படி அவர்கள் பக்தியை அதன் நிலைகளை பலவாறாக பிரித்து அதை விளக்கி மேலே எழுந்து எடுத்துச் செல்வார்கள். இந்த நான்கு நிலைக்கு சைவத்தில் நான்கு பேர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சமையக்குரவர்கள் என்று பெயர். சரியை நிலைக்கு திருநாவுக்கரசர் என்றும், கிரியை நிலைக்கும் திருஞானசம்பந்தர் என்றும் யோக நிலைக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்றும் ஞான நிலைக்கு மாணிக்கவாசகர் என்றும் வைத்திருக்கிறார்கள்.
.... "காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி"....
என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் விளிக்கிறார். இது ஞானத்தின் அனுபவச் சொற்கள். எனவே இது ஞானத்தில் ஞானம்.
"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே" ...
இது நாவுக்கரசரின் நான்காம் திருமுறை. இதில் சலம், பூ, தூபம் எல்லாம் புறத்தே நாம் வாழிபாடு செய்வது. ஆனால் அவர் ஞான நிலையில் இருந்துகொண்டு இதைச் செய்கிறார். எனவே இது ஞானத்தில் சரியை
முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கும் பாதைகள் அல்ல, படிகள். ஒவ்வொரு படியாக கடந்து ஞானம் என்ற நிலைக்கு வருவது பக்தியின் உச்ச தருணம். அப்படி பார்த்தால் திருஞானசம்பந்தர் அப்பர் பெருமான் எல்லாம் கீழ்படிகளில் தான் இருக்கிறார்களா என்ற கேள்வி வரும். அதற்கு சைவம் ஞானத்தில் சரியையில் திருநாவுக்கரசரும் ஞானத்தில் கிரியையில் திருஞானசம்பந்தரும் ஞானத்தின் யோகத்தில் சுந்தரமூர்த்தி சாமிகளும் ஞானத்தில் ஞானம் மாணிக்கவாசகரும் உள்ளனர் என்று அதை விளக்குவார்கள். இதுதான் சைவத்தின் தோத்திர நிலைகள். நாம் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடலாம் என்று உணர்ந்தால் இந்த வகைமை....
Comments
Post a Comment